Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சூர்யாவின் ரோலக்ஸ் படத்தை தயாரிக்கிறதா ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவின்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதன்முறையாக தமிழில் விஜய்யை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதன்மூலம், தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து பல படங்களை தயாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சூழலில், 2022ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தில், சூர்யா சிறப்பு தோற்றத்தில் ‘ரோலெக்ஸ்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது.

அதன் தொடர்ச்சியாக, ‘ரோலெக்ஸ்’ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு தனி திரைப்படம் உருவாகும் என தகவல் வெளியானது. தற்போது, லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா இணைந்து பணியாற்றவிருக்கும் ‘ரோலெக்ஸ்’ படத்தை, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News