பாலிவுட்டில் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. சர்வதேச தரத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியை ஹீரோயினாக நடிக்க வைக்க பிரபல தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார். 28 வயதான சிட்னி ஸ்வீனியிடம் ரூ.530 கோடி சம்பளமாக வழங்குவதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் ரூ.415 கோடி அவரது சம்பளமாகவும், ரூ.115 கோடி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தமாகவும் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மிகப்பெரிய தொகையை அறிந்த சிட்னி ஸ்வீனி ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். எனினும், ஹாலிவுட்டில் ஏற்கனவே அவருக்கு பல படங்கள் காத்திருப்பதால் உடனே ஒப்புதல் தராமல் பரிசீலனையில் உள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு நியூயார்க், பாரீஸ், லண்டன், துபாய் போன்ற நகரங்களில் தொடங்கும் என்றும், சிட்னி ஸ்வீனி இந்திய பிரபலத்தை காதலிப்பது போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாம். ‘யூபோரியா’ சீரியஸால் பிரபலமான சிட்னி ஸ்வீனி, தற்போது நடித்துள்ள ஹவுஸ்மெய்டு படமும் விரைவில் வெளியாக உள்ளது.