தமிழ் சினிமாவில், இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து, மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில், இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், கவுதம் மேனன் வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்தார் என்றெல்லாம் தகவல்கள் உலாவிய.
தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கவுதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக இருக்கிறது. இதில், நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக விஷயம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ரத்னம் திரைப்படத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.