தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் சேதுபதி, ‘விடுதலை 2’ படத்திற்குப் பிறகு ‘டிரெயின்’ மற்றும் ‘ஏஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளிவரவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, “பிசினஸ்மேன்”, “டெம்பர்”, “லிகர்”, “டபுள் இஸ்மார்ட்” போன்ற பிரபலமான படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்திய அளவில் உருவாகும் இந்த படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்கின்றார், மேலும் இந்த படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்குப் பிறகு, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராக வில்லனாக யார் நடிக்கப்போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகிய தகவலின்படி, ‘புஷ்பா’ மற்றும் ‘மாமன்னன்’ போன்ற படங்களில் வில்லன் வேடங்களில் கலக்கிய பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய் சேதுபதியுடன் அவர் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘விக்ரம்’ படங்களில் இணைந்து நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.