Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

ராம் சரண்-ஐ இயக்குகிறாரா இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா? உலாவும் புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துக் கடந்த காலத்தில் வெளியான “கேம் சேஞ்சர்” திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வெற்றியை பெற முடியவில்லை. இந்நிலையில், தற்போது புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவரது ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், சிவராஜ் குமார் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்ததாக “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்திற்குப் “டெவில்” என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News