Touring Talkies
100% Cinema

Thursday, May 8, 2025

Touring Talkies

கதாநாயகனாக புதிய அவதாரம் எடுக்கிறாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற புதிய கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி, அதன் கீழ் தொடர்ச்சியாக படங்களை உருவாக்கி வருகிறார். இதனால் அவரது இயக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’, ‘விக்ரம் 2’ ஆகிய படங்களை இயக்கும் திட்டத்தில் உள்ளார். இதற்குபின், தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் பல படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார். முதலில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவிடும் ‘பயோகிராபி’ படத்தை இயக்குவதற்காக அவர் திட்டமிட்டிருந்தாலும், அது தாமதமாகும் நிலையில், தற்போது லோகேஷை வைத்து புதிய படத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்தப் புதிய முயற்சி குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News