தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஹெச்.வினோத் தற்போது விஜய்யின் நடிப்பில் ஜன நாயகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ‘மகளிர் மட்டும்’ பட இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
