கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிக்கிறார். தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்று அழைக்கப்படும் இந்த படம், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சமீபத்தில் சுந்தர்.சி தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதால், ரஜினியின் 173வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ரஜினிக்கு பிடித்த கதையை மட்டுமே படமாக எடுப்போம். புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்கும் வாய்ப்பு உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

