‘ஜவான்’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அட்லி தனது அடுத்தப் படத்திற்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் ஹீரோ அல்லு அர்ஜுனை தேர்ந்தெடுத்துள்ளார். இந்தப் படத்தில் தீபிகா படுகோன்,மிருணாள் தாக்கூர் தற்போது நடித்து வருகின்றனர். மேலும் ஜான்வி கபூர் மற்றும் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா என பல முன்னணி நடிகைகள் இப்படத்தில் இணையுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நான்கு விதமான வேடங்களில் நடிக்கிறார். ஒரு வயதான தாத்தா, ஒரு தந்தை மற்றும் இரு மகன்கள் என மொத்தம் நான்கு வெவ்வேறு தோற்றங்களுடன் அவருடைய கதாபாத்திரங்கள் உள்ளன என சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில், தாத்தா மற்றும் அப்பா கதாபாத்திரங்களுக்கு வேறு நடிகர்களை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த இயக்குனர் அட்லி, கதையை கேட்டவுடன் அல்லு அர்ஜுன் “அந்த வேடங்களிலும் நானே நடிக்கிறேன்” என்று கூறியதும், அட்லி அவரை வைத்து லுக் டெஸ்ட் எடுத்து பின்னர் இதற்கு ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.