பிரபல இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரு புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு இணைந்துள்ளார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது, மேலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர், விஜய் சேதுபதி நடித்த ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ராதிகா ஆப்தே, கார்த்தி நடித்த ‘ஆழகு ராஜா’ படத்திலும், ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்திருந்ததும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.