விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமிஷா படேல். அதன் பின்னர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரான ஒருவரைத் திருமணம் செய்ய விரும்புவதாக அமிஷா படேல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “டாம் குரூஸை எனக்கு மிகுந்த விருப்பம். சிறுவயது முதலே அவரை மிகவும் விரும்புகிறேன். அவருக்காக நான் எதையும் செய்யத் தயார். வாய்ப்பு கிடைத்தால் அவரையே திருமணம் செய்து கொள்வேன்” என்றார்.