பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தை இயக்கியவர் கீர்த்தீஸ்வரன். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இளம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் விளைவாக, படம் 100 கோடியை கடந்த வசூலை சாதித்துள்ளது.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: என் இரண்டாவது படத்தை, தரணி இயக்கத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ படத்தின் பாணியில் உருவாக்கப் போகிறேன். ஆக்ஷன் மற்றும் காதல் கலந்து அமைந்த ஜானரில், ‘கில்லி’ படத்துக்கு இருந்த அதே வேகமும் தனித்துவமும் இருக்கும்.
இயக்குநர் தரணியின் திரைக்கதை, விஜயின் நடிப்பு, பிரகாஷ்ராஜின் வலுவான பாத்திரம் என அந்த படம் முழுவதும் ஒரு மாஸ் அனுபவமாக இருந்தது. அதுபோலவே, தற்போதைய காதல் மோதலை மையமாகக் கொண்ட, விறுவிறுப்பான கதையுடன் எனது அடுத்த படத்தையும் ‘கில்லி’ பாணியில் இயக்கப் போகிறேன் என்றுள்ளார் கீர்த்தீஸ்வரன்.

