மதுரையை சேர்ந்த காரத்தே மாஸ்டரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி, கே. பாலசந்தர் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். பின்னர், ‘பத்ரி’ திரைப்படத்தில் விஜய்க்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார்

நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் கராத்தே பயிற்சி அளித்தவர். தற்போதைய சூழ்நிலையில், அவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் உணர்ச்சிப் பூர்வமான ஒரு வேண்டுகோளை ஷிகான் ஹுசைனி வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புகிறேன். ஆனால், என் இதயத்தை மட்டும் என் வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அவரது இந்த விஷயம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.