கதையைக் கேட்டு சிலாகித்து அந்த கதையில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் அது தோல்வி அடைவதும்,. வேண்டாம் என நிராகரித்த படங்கள் வெற்றி பெறுவதும் திரையுலகில் சகஜம்.
அப்படியான ஒன்றுதான், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து பெரும் வெற்றி பெற்ற, “விண்ணணைத் தாண்டி வருவாயா” திரைப்படம்.
முதலில் இந்த கதையை தெலுங்கில் எடுக்க முடிவு செய்திருந்தார் கௌதம் மேனன். இதையடுத்து தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவிடம் கதையை கூறினாராம். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
சரி, தமிழில் இந்த படத்தை கொண்டு வரலாம் என திட்டமிட்டு தனுஷிடம் கூறினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அவருக்கு உடன்பாடாக இல்லை. ஆகவே அவரும் மறுத்துவிட்டார்.
பிறகுதான் சிம்பு இந்த கதையைக் கேட்டு நடிக்க சம்மதித்தார். படமும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது.
நடிகர்கள் ஒன்று நினைக்க.. ரசிகர்கள் வேறொன்று நினைக்கிறார்கள்!