Friday, April 12, 2024

சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திறக்கப்படுமா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தக் கொரோனா லாக் டவுன்-2-ன் தாக்கத்தினால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் பள்ளியில் அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டிய தருணம். பள்ளிக் கட்டணத்தைக் கட்ட வேண்டிய தருணம்.இந்த நேரத்தில் லாக் டவுன் செய்ததினால் பணத்தைப் புரட்டுவதற்கு அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது இவர்கள் அனைவரின் கேள்வியும் ஒன்றுதான். என்றைக்கு தமிழ்த் திரையுலகம் பழைய நிலைமைக்கு வரும்.. இதற்குத் தயாரிப்பாளர்கள் கேட்கும் எதிர்க் கேள்வி.. என்றைக்கு சினிமா தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதியளிக்கும் என்பதுதான்.

இப்போதைய நிலையில் தற்போதுதான் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறையத் துவங்கியுள்ளது. முழுமையாகக் குறைவதற்கு இன்னும் குறைந்தபட்சம் 6 மாதங்களாகிவிடும். ஆனால் இந்த மாதக் கடைசியில் அல்லது ஜூன் கடைசியிலாவது வெறும் ஆயிரம் பேருக்குள்ளாக தொற்றாளர்களின் எண்ணிக்கை சுருங்கிவிடும் என்று அரசுத் தரப்பு எதிர்பார்க்கிறது.

இதையடுத்து ஜூலை முதல் வாரத்தில் முக்கியமான துறைகளுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது.. ஜூலை 3-வது வாரத்தில் சின்னத்திரை உள்ளிட்ட அடுத்த முக்கியத் துறைகளுக்கு அனுமதி கொடுப்பது. ஆகஸ்ட் -2-வது வாரத்தில் சினிமா தியேட்டர்கள், மால்கள் உட்பட அனைத்திற்கும் அனுமதி கொடுப்பது என்று திட்டமிட்டுள்ளார்கள்.

இதனால் எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவது ஆகஸ்ட் 15-ம் தேதியாக இருக்கலாம் என்று திரையுலகத்தினரே கணித்திருக்கிறார்கள். அந்தத் தேதியில் எந்தப் பெரிய திரைப்படம் வரப் போகிறதோ தெரியவில்லை. அப்படி ஏதாவது வந்தால்தான் சினிமா தியேட்டர்கள் என்ற ஒன்று இருப்பதே மக்களுக்குத் தெரிய வரும்.

எது எப்படியிருந்தாலும் இந்தத் திட்டம்கூட கொரோனா நோய்த் தொற்றின் கைகளில்தான் உள்ளது. முழுமையாக கொரோனாவை விரட்டியடிக்கும்வரையிலும் எந்தத் தொழிலுக்கும் இங்கே உறுதியளிக்க முடியாத நிலைதான் உள்ளது.

- Advertisement -

Read more

Local News