‘கஸ்டடி’, ‘வா வாத்தியார்’, ‘ஜினி’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரை உலகில் பல படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி ஷெட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் நானியுடன் இணைந்து ‘ஷியாம் சிங்காராய்’ படத்தில் முத்தக் காட்சியில் நடித்திருந்தார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், “நான் 17 வயதில் முத்தக் காட்சியில் நடித்தது மிகவும் அசௌகரியமாக இருந்தது. அந்த அனுபவத்திற்குப் பிறகு இனிமேல் இத்தகைய காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். இனிமேல் முத்தக் காட்சிகளிலோ, புகைபிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன்” என்று கூறினார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் சிலர், ‘ஷியாம் சிங்காராய்’ படத்தில் கீர்த்தி ஷெட்டி முத்தக் காட்சியில் நடித்தபோது அவருக்கு வயது வெறும் 17 மட்டுமே இது சரியா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.