Friday, January 17, 2025

இவரை வைத்து இன்னும் பத்து படங்களாவது இயக்குவேன்… இயக்குனர் அனில் ரவிபுடி டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர் அனில் ரவிபுடி. இவர் தற்போது வெங்கடேஷை வைத்து ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேர்காணல் ஒன்றில் பேசிய அனில் ரவிபுடி, “நான் வெங்கடேஷ் சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அவரை என் படங்களில் சிறந்த முறையில் சித்தரிக்க எப்போதும் முயற்சிப்பேன். குறைந்தது 10 படங்களை அவரை வைத்து எடுப்பேன்” என்று உற்சாகமாக தெரிவித்தார்.

அனில் ரவிபுடி மற்றும் வெங்கடேஷின் கூட்டணி ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், அனில் ரவிபுடி தனது அடுத்த படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News