நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‛ரெட்ரோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரூ.100 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் அளித்த ஒரு பேட்டியில், ஜகமே தந்திரம் படத்திற்கு பின் தனுஷ் உடன் இணைந்து இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தை முதலில் நான் இயக்குவதாக இருந்தது.
பின்னர் இதற்காக இளையராஜா மற்றும் தனுஷ் உடன் சந்திப்பு எல்லாம் நடைபெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தை என்னால் இயக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.