‘மருதம்’ என்ற புதிய திரைப்படத்தை அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி. வெங்கடேசன் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குநர் வி. கஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த்தும் ரக்ஷனாவும் கதாநாயகன் , கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ரக்ஷனா, பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கிய மார்கழி திங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இவர்கள் தவிர அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவை செய்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் அறிமுக விழாவில் நடிகை ரக்ஷனா பேசியதாவது: “மருதம் என் இரண்டாவது படம். இதற்காக கடவுளுக்கு நன்றி. இரண்டாவது படத்திலேயே பெரிய ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நான் நினைத்ததே இல்லை. விதார்த்துடன் இணைந்து நடித்தது மிக இனிய அனுபவமாக இருந்தது. ஒரு சிறிய கிராமத்தை அழகாகக் காட்டியுள்ளனர். கடும் வெயிலில் படம் எடுத்தோம். உழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஏன் ஒரு நடிகை அம்மாவாக நடிக்கக் கூடாதா? என்ற கேள்விகளை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அம்மாவின் உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. மருதம் மிகச் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.