தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களுக்குப் பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘கூலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பை அனிருத் செய்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 70 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கைதி-2 படத்தை அடுத்ததாக இயக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜிடம் சமீபத்திய ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது, அதாவது “கமல், ரஜினி, விஜய் ஆகிய பெரிய நடிகர்களை வைத்து நீங்கள் படம் எடுத்துவிட்டீர்கள் அஜித்தை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என்பதுதான் அந்த கேள்வி.
அதற்கு பதிலளித்த அவர், அஜித் சாரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாகவே எனது மனதுக்குள் இருந்து வருகிறது. விரைவில் அதற்கான முயற்சியைத் தொடங்குவேன். மிக அருகில், என் அந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார் லோகேஷ் கனகராஜ்.