தமிழில் ரெட்ரோ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே.

தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அடிக்கடி மும்பை- சென்னை இடையே பயணம் செய்து வருகிறாராம்.
இந்நிலையில், சென்னையில் பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ளத்தால் நிரம்பியபோது விமான நிலையத்துக்கு செல்ல அவர் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டார். காரின் பின்புறம் அமர்ந்தபடி அந்த நிலையை வீடியோவாக பதிவு செய்து, விமான நிலையத்துக்கு விரைவான படகு சவாரி வேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.