தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன்’ மற்றும் கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் உருவாகும் ஹாரர் திரில்லர் படம் ‘கிஷ்கிந்தாபுரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘கிஷ்கிந்தாபுரி’ திரைப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் அனுபமா பேய் உருவத்தில் தோன்றியிருந்தார், இது பலரை ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில், ஹாரர் திரைப்படங்கள் குறித்து அனுபமா பேசுகையில், “எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும். நான் சிறு வயதில் இருந்தபோதே ரகசியமாக பேய் படங்களைப் பார்த்துவந்தேன். என் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு, ஹாரர் படங்களை பார்ப்பேன். அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, இருட்டில் பார்த்தால் மட்டுமே உண்மையான அனுபவம் கிடைக்கும் என்று நினைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.