தமன்னா சமீபத்தில் தனது வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். “என்னுடைய 30வது வயதில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் அமைத்து, குழந்தைகளுடன் வாழ நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை,” என்று கூறியுள்ளார். தற்போது தமன்னா 35 வயதாகிறார். கடந்த 20 ஆண்டுகளாக ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துவரும் அவர், சினிமா மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றில் மொத்தம் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவரின் சில காதல் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், சமீபத்தில் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த உறவு திருமணமாக முடியாமல் முடிவடைந்துவிட்டது. இதனால் திருமணம் குறித்த கவலை தமன்னாவின் மனதில் நிலைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இப்போதெல்லாம் ஹிந்தியில் தமன்னாவுக்கு பல வலுவான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும், தென்னிந்தியாவில் அவரின் திரைப்படங்கள் குறைந்திருக்கின்றன. அதேசமயம் ஹிந்தியில் அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

