இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ படத்தில் இடம் பெற்ற பிளாஷ்பேக் காட்சிகள் பெரிதும் விமர்சிக்கப்பட்டன.

இதைப் பற்றி சமீபத்திய பேட்டியில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், விஜய் நடித்தால் கட்டாயம் ஒரு ‘இன்ட்ரோ சாங்’ இருப்பது வழக்கம். ஆனால் ‘லியோ’வில் அப்படி ஒரு பாடலை பொருத்த முடியவில்லை. படக்குழுவினர் பாடல் வேண்டும் என வலியுறுத்தியதால், இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சியை பாடலுடன் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, என அவர் கூறினார்.
மேலும், “பிளாஷ்பேக் சுமார் 30 நிமிடங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் படத்தின் மொத்த நீளம் அதிகமாகிவிடும் என்பதால் 18 நிமிடங்களுக்கு சுருக்கினேன். அதனால் தான் பிளாஷ்பேக் பகுதிக்குச் நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தன என நினைக்கிறேன் என்றுள்ளார்.