அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘லெவன்’ திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். ரியா ஹரி கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இப்படத்தை தயாரித்திருந்தனர். விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் வகைச்சிறப்பில் வந்த இந்தப் படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில், லெவன் படத்தின் கதையை முதலில் சிம்புவுக்காகவே எழுதினேன் பெஞ்சமின் என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவரை அணுக முடியவில்லை. அவருடன் ஒருமுறையாவது பணியாற்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.