சமீபத்தில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் ‘நெமலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ப்ரீத்தி முகுந்தன் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இந்த படத்தில் அவர் நடித்த அனுபவம் குறித்து, அந்தக் கதாபாத்திரத்துடன் ஆறு மாதங்களாக வாழ்ந்ததாகப் பகிர்ந்துள்ளார்.

இதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ப்ரீத்தி முகுந்தன், “பார்வையாளர்கள் எனக்கு அளித்த அன்புக்கும், அவர்கள் சொன்ன வார்த்தைகளும் எனக்குள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், நான் ஒரு நடிகையாக கமெரா முன் நடித்தது இரண்டு வாரங்களே.
ஆனால் நெமலியாக நான் ஆறு மாதங்களாகவே வாழ்ந்தேன். இந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நான் உளமார நன்றி செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.