தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’ மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால், பின்னர் ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘லால் சலாம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் அவர், “என் படங்களை ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க வேண்டிய சூழலை நான் உருவாக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்காகவே கதைகளின் தேர்வில் மிகவும் கவனமாக நடந்து வருகிறேன்” என்றார்.
மேலும், தற்போது அவர் நடித்துள்ள ஆர்யன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரவீன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் படம் அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது.