நடிகர் வைபவ் நடிக்கும் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்படத்தில் நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், சமூக வலைதளங்களில் வலம்வருகின்ற செய்திகளின் படி “நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறீர்களா?” என்ற கேள்வி குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் நான் ப்ளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கோலிவுட் வட்டாரங்களில் அதுல்யா தனது முகத்தை அழகாக மாற்றும் வகையில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்துள்ளார். இதற்கு முன் பிரபல நடிகைகள் இதை செய்துள்ளார்கள் என்றும் தகவல்கள் உலாவருகின்றன.
இந்த வகையான சிகிச்சைகள் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் சாதாரணமாகவே நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.