இயக்குநர் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இவானா. மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர், அதன் பிறகு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன் பின் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து ‘கள்வன்’ என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் சிக்கல்கள் உங்களை எதிர்கொண்டதா என ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது, அதற்கு இவானா, “திரையுலகத்தில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் அதிகமாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். ஆனால் என் அனுபவத்தில் எனக்கு இதுவரை அத்தகைய பிரச்சனைகள் ஏற்படவில்லை என்று கூறினார்.
மேலும், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு எனது அம்மா எப்போதும் எனது கூட வருவார். அதுபோல், என் உறவினர் ஒருவர் எப்போதும் எனக்கு பாதுகாப்பாக இருப்பார். இப்படி நான் எப்போதும் பாதுகாப்புடன் செல்வதால்தான், எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.