இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் நிகில் காமத் பாட்காஸ்டில் கலந்து, தனது ஆன்மீக மற்றும் சூஃபி பயணத்தை பற்றி பேசியுள்ளார். “நான் இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் படித்து உள்ளேன். மதத்தின் பெயரில் மற்றவர்களுக்கு தீங்கு செய்வது எனக்கு விருப்பமற்றது.

மேடையில் நிகழ்ச்சி நடத்தும்போது, பல கலாச்சாரம், மொழி, மதங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாகும் புனித இடத்தில் நுழைந்தது போல உணர்கிறேன். நாம் ஒற்றுமையின் பலனை அங்கு அனுபவிக்கிறோம்.
சூஃபித்துவம் என்பது ‘இறப்பதற்கு முன் இறப்பது’ போன்றது. காமம், பேராசை, பொறாமை, முன்முடிவு போன்றவை அனைத்தும் இறந்தப்பின்னரே சுயம் அழியும். ஈகோ இல்லாமல் வெளிப்படையானவராக மாற முடியும். மதம் வேறானாலும்கூட நம்பிக்கையின் நேர்மையே முக்கியம். அது நம்மை நல்ல செயல்களுக்கு வழிநடத்தி, மனிதநேயம் மேம்பட உதவுகிறது. நாம் அனைவரும் ஆன்மீக ரீதியாக வளமானவர்களாக இருக்க வேண்டும்; ஆன்மீக செல்வம் வந்தால் பின்னர் பொருள் செல்வம் வரும்” என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

