ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம்-யின் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சீரன்.இதில் ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகிறார். சமூகத்தின் நிலைமை, ஏற்றத்தாழ்வுகள், மனிதனின் சம உரிமைகள் குறித்து உரக்கக் கூறும் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், சீரன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களின் இயக்குநர் ராஜேஷ் எம் இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதுடன், படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டார்.



நடிகை இனியா, இப்படம் குறித்து பேசுகையில், சீரன் டிரெய்லர் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தில் நான் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளேன். 20 வயது பெண்ணாகவும், இரண்டு குழந்தைகளின் அம்மாவாகவும், 56 வயது பெண்மாகவும் நடித்துள்ளேன். நீங்கள் இதைப் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்,” எனக் கூறினார்.இயக்குநர் துரை K முருகன், “இயக்குநர் ராஜேஷ் எம் சார் என்னை தன்னுடன் சேர்த்துக் கொண்டதால்தான் நான் இங்கு இருக்கிறேன். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நன்றி சார். இனியா மேடம் மூன்று தோற்றங்களில் அசத்தியிருக்கிறார்; அவர் நடிப்பு ராட்சசி. செண்ட்ராயன் எனக்கு நண்பன், சிறிய கதாபாத்திரமாக நடித்துள்ளார், எனக் கூறினார்