ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கியவர் நெல்சன். அந்த படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். ‘வேட்டையன்’ படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்; ‘கூலி’ படத்தில் அமீர்கான் நடித்தார். இப்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் இணைந்துள்ளார்.

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பற்றி ஒரு விழாவில் இயக்குநர் நெல்சன் கூறியதாவது: “ஜெயிலர் படத்தைப் போலவே ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. ஆனால் இந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது. இருந்தாலும் இது ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும் என்பது உறுதி. முக்கியமாக, இப்போதே ‘ஜெயிலர் 2’ குறித்து அதிகமாக ஹைப்பை ஏற்படுத்தும் வகையில் பேச விரும்பவில்லை.
ஏற்கனவே இந்த படத்துக்காக ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நேரத்தில் நானும் அதற்கு மேலாக ஹைப்பை உருவாக்கும் வகையில் பேச வேண்டாம் என்று எண்ணுகிறேன். அப்படி நான் பேசினால், படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துவிடும்” என்றுள்ளார்.