அக்ஷய் குமார் தனது பேட்டியில், ”உணவுக் கட்டுப்பாடு விவகாரத்தில் எனக்கு நானே விதிகளை வகுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த விதிகளை மிகவும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றுகிறேன்.கடந்த 20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவது கிடையாது. பார்ட்டிகளுக்குச் சென்றால் கூட இதனைப் பின்பற்றுகிறேன்.பார்ட்டிகளுக்குச் சென்றால் குடிப்பது போன்று அல்லது கேக் சாப்பிடுவது போன்று நடிப்பேன். எனது உடல் நலத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பேன். மாலை 6.30 மணிக்கு முன்பு நானும் வழக்கமான மனிதனாகத்தான் இருப்பேன். பகல் நேரத்தில் சோலேபூரி, சிலேபி, பர்பி என அனைத்தையும் சாப்பிடுவேன்.
