மலையாள சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பிரியதர்ஷன். மலையாளம் மட்டுமல்ல, தமிழ் மற்றும் ஹிந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக ஹிந்தியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது அக்ஷய் குமார், சைப் அலி கான் இணைந்து நடிக்கும் ‘ஹைவான்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. தனது பயணத்தில் நூறாவது படத்தை நெருங்கி விட்டதால், அந்தப் படத்துடன் ஓய்வு பெறுவார் என்ற பேச்சு வட்டாரங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் பிரியதர்ஷன், “நூறாவது படத்துடன் ஓய்வு பெறுவேன் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. ஓய்வு என்பது உடல் நிலையைப் பொறுத்தது. உடல் நலம் நன்றாக இருக்கும் வரை நான் இயக்கத் தொடர்வேன். நூறாவது படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிப்பார் என்பது மட்டும் உறுதி. ஆனால் எந்தப் படத்தை நூறாவது படமாக இயக்கப்போகிறேன் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. காரணம், ஒரு படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அடுத்தப்படம் குறித்து நான் யோசிப்பதில்லை. தற்போது என் முழு கவனம் ‘ஹைவான்’ படத்தில்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.