சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்கத்தில் இருந்து நடிப்புக்கு ஏன் வந்தீர்கள் என கேட்கிறார்கள். நடிக்க நான் வந்ததது விருப்பத்தால் அல்ல, கட்டாயத்தால் தான். ஒரு கட்டத்தில் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதே சமயம் என் மகள் திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னாள். தந்தையாக என் கடமை அதை ஆதரிப்பது. ஆனால் அந்த சமயத்தில் என்னிடம் போதுமான பணம் இல்லை. இயக்குனராக சம்பாதிக்கவே சில ஆண்டுகள் தேவைப்படும்; ஆனால் ஒரு நடிகராக இருந்தால் ஒரு மாதத்திலேயே சம்பாதித்துவிடலாம். அதனால் தான் நடிக்க துவங்கினேன்; நடிப்பு, இயக்கம் இரண்டையும் செய்தேன். அப்போதுதான் ஒரு நடிகர் எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
