Monday, November 18, 2024

நான் இயக்குனர் ஆனால் இவர்தான் என் படத்திற்கு ஹீரோ… யுவன் சொல்வது யார் என தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து உருவாக்கி வரும் “தக் லைஃப்” படத்தில் எஸ்.டி.ஆர். நடித்து வருகிறார். இதற்கு முன்பு கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்.டி.ஆர். 48 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால், எஸ்.டி.ஆர் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகுவதால், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தை தரமாக உருவாக்குவதற்காக கூடுதலாகக் காலம் எடுத்துக் கொண்டுள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் வருகின்றன. மேலும், சில காரணங்களால் கமல் ஹாசன் இப்படத்தின் தயாரிப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சூழலில், இசையமைப்பாளர் மற்றும் சிம்புவின் நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் “நீங்கள் இயக்குநராக ஆவதற்கான எண்ணம் உள்ளதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யுவன் பதிலளிக்கையில், “நிச்சயமாக எனக்கு இயக்குநராகும் ஆர்வம் உள்ளது. நான் இயக்குநராக மாறினால், சிம்புவை ஹீரோவாக வைத்து படம் எடுப்பேன்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News