இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சேலம் சரவணன், செம்பியான் வினோத், யோகி பாபு, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் அறிமுகமான ரோஷினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் 52வது படமாகும் இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ரோஷினி, “தலைவன் தலைவி படத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படத்தில் நடித்த வாய்ப்பு கிடைத்ததையே ஒரு பெருமையாக கருதுகிறேன்.
இதில் நான் ‘ராகவர்தினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அது விஜய் சேதுபதியின் தங்கையாக இருக்கும் கதாபாத்திரம். இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. இதுவரை நடித்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தது. அனைவரும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தருங்கள்,” என உருக்கமாக பேசியுள்ளார்.