சார்ம் சுக் வெப் தொடரில் ரேணுபாபி கேரக்டரில் நடித்து ஓ.டி.டி. தளத்தில் பிரபலமான சினேகாபால், டிஸ்னி ஹாட்ஸ்டாரின் தி சிட்டி அண்ட் எ கேர்ள் ேஷா மூலம் வடமாநில ரசிகர்களிடம் பிரபலமானார். அல்தாப் ராஜா இசை வீடியோ ‘பூல் கே பத்லே பத்தர்’ல் நடித்து இளைஞர்களை கிறங்கடித்து கோலிவுட் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தமிழ் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதையம்சம் ஆக் ஷன் படம் என்றால் உடனடியாக ஓ.கே., சொல்லி விடுவேன். யோகா, நடனத்துடன் நாள் தவறாமல் ஜிம் சென்று விடுவேன். இதுதான் என் ‘பிட்னஸ்’ ரகசியம். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பேன் பாடல்கள் கேட்பேன். பயணங்களில் ஐபேட் அல்லது லேப்டாப்பில் ஏதாவது ஒரு வெப் சீரியல் பார்த்து கொண்டபடி தான் பயணிப்பேன் என கூறியுள்ளார்.
