நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முன்பதிவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “GBU படத்தின் இசை வேலைகளை மிகவும் ஆர்வத்துடன் செய்துள்ளேன். இந்த படத்தை திரையில் பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மிகவும் உற்சாகமான நேரங்களை இது எனக்குத் தந்தது” என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.