கடந்த வாரம் மார்ச் 14ம் தேதி 9 படங்கள் வெளிவந்தன. ஆனால், இந்த வாரம் மார்ச் 21ம் தேதி நான்கு படங்கள் மட்டுமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.”அஸ்திரம், எனை சுடும் பனி, பேய் கொட்டு, ட்ராமா” ஆகிய நான்கு படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ள ‘வீர தீர சூரன் 2’ வெளியாக உள்ளது. அதற்கடுத்து ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ படம் நேரடியாக வெளியாகிறது.
