தெலுங்கு திரைப்படத் துறையில் மற்றொரு பான் இந்தியா நட்சத்திரமாக உள்ளவர் அல்லு அர்ஜுன். இவர், பிரபல இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இந்தப் படம் ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு உருவாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகும் நிலை வந்துவிட்டது.

இதன் விளைவாக, திரிவிக்ரம் இயக்கும் அல்லு அர்ஜுன் படம் ‘டிராப்’ ஆகிவிட்டது. மேலும், இதன் காரணமாகக் கொண்டு, திரிவிக்ரம் அல்லு அர்ஜுன் மீது கோபமாக உள்ளார் என டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவின.
இந்தச் சூழ்நிலையில், பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி, தனது எக்ஸ் தளத்தில், திரிவிக்ரம் காருவின் அடுத்த திரைப்படங்கள் வெங்கடேஷ் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் மட்டுமே இருக்கிறது. மற்ற செய்திகளெல்லாம் யூகங்கள் மட்டுமே. திரிவிக்ரம் காருவின் உறுதிப்படுத்தப்பட்ட படங்களை இங்கு நான் பகிர்கிறேன் எனத் தெளிவாக கூறியுள்ளார்.