சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற வெற்றிப் படங்களாகும். இப்படங்களில் அல்லுவுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், உலகளவில் ரூ.1800 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜுன் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் கதை அமைப்பில் உருவாக உள்ளது. இதில் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
மேலும், புஷ்பா 2 படத்திற்குப் பிறகு திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்த அல்லு அர்ஜுன், தற்போதைக்கு அந்த படத்திலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, தற்போது பசில் ஜோசப் மற்றும் பிரசாந்த் நீல் இயக்கும் படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். குறிப்பாக மலையாள நடிகர் பசில் ஜோசப், அல்லு அர்ஜுனிடம் ஒரு கதை கூறியபோது, அது அவருக்கு மிகவும் பிடித்ததாகவும், அவர் உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், இந்த புதிய திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாவது நிச்சயமாகும்.