கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவாகிய “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்தனர். ஆனால் சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்றது. அதன் பிறகு, மீண்டும் சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு, படப்பிடிப்பு தொடர்ந்தது. பின்னர் 2018-ம் ஆண்டு, படத்தின் புதிய டீசர் வெளியானது. இருப்பினும், தொடர்ந்து படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், அவ்வப்போது மற்ற படங்களில் நடித்தபடியே, “துருவ நட்சத்திரம்” படத்தின் விடுபட்ட காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், ஜிவிஎம்,”எல்லா தடைகளையும் தாண்டி, உங்களுக்காக ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.” என்று கூறினார்.இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
காரணம், தரமான ஆக்ஷன் திரில்லர்
ஜிவிஎம் – விக்ரம் கூட்டணி முதல் முறையாக இணைந்த திரைப்படம்
பாடகர் பால்டப்பாவின் ‘His Name is John’ ஹிட் பாடல்.
இதனால், ரசிகர்கள் “துருவ நட்சத்திரம்” எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பிப் 28 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,”ரொம்ப நாளாக எல்லாரும் எதிர்பார்த்துக்கிட்டு இருந்த ‘துருவ நட்சத்திரம்’, வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகப் போகிறது. நானே அந்தப் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். வெளியீட்டு நாளில், ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக ஆவலாக இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.