சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா நடித்துள்ள திரைப்படம் ‘டீசல்’. ‘பார்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற தொடர்ச்சியான ஹிட் படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘டீசல்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியானது. இப்படத்தை சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,நேற்று ‘டீசல்’ திரைப்படத்தை பார்த்தேன். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம். குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.