தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் , பிசியான முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். இந்த வருடத்தில் அவரின் இசையில் இதுவரை ‘வணங்கான்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘கிங்ஸ்டன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று படங்களும் பெரிதான வெற்றியை பெறவில்லை என்றாலும், அவரது இசையைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் நேர்மறையாகவே வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளிவர உள்ள முக்கியமான மூன்று படங்களுக்கும் இசையமைப்பவர் ஜிவி பிரகாஷ்குமாரே. வரும் வாரத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகும் ‘வீர தீர சூரன் 2’, அடுத்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
மேலும், மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள தெலுங்கு திரைப்படமான ‘ராபின்ஹுட்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்குமார். இதன் காரணமாக, இந்த இரண்டு வாரங்களுக்குள் இந்த படங்களின் வேலைகளும் ப்ரோமோஷன்களும் காரணமாக ஜிவி பிரகாஷ் மிகுந்த பிஸியாக உள்ளார்.