‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ஜூங்கா’, ‘லியோ’, ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த மடோனா செபாஸ்டியன், தமிழ் திரைப்படங்களைத் தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும், அண்மைக் காலமாக அவர் மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு அவரின் எந்தப் படமும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறார் மடோனா. இதனால் சிலர் விமர்சனங்கள் எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், “கவர்ச்சி காட்டுவது தவறு அல்ல. அதுவும் ஒரு கலைப்பரிமாணம் தான். அதேசமயம் எல்லை உண்டு. கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தால் போதும். இதில் விமர்சிக்க எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

