அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான மிகப்பெரிய வெற்றி படமான ஜவான் படத்தை தொடர்ந்து சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தனது புதிய படத்தை இயக்கப் போகிறார் என்று பல மாதங்களாக கூறப்படுகிறது.

இப்படமானது மறு ஜென்மம் குறித்த கதையை கொண்டதாகவும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஐந்து நடிகைகள் நடிக்க போவதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இதில் நடிகை ஜான்வி கபூர் உள்பட இரண்டு இந்திய நடிகைகள் மற்றும் அமெரிக்கா மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்த 3 சர்வதேச நடிகைகளும் நடிக்கிறார்களாம். அல்லு அர்ஜுன் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் இந்த படம் பான் இந்தியா கதையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.