Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சூர்யா 44 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா சூர்யா.. வேற வேற கெட்டப்பில் இருக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சரியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இதுவரை படப்பிடிப்பு அந்தமான், கேரளா, மூணார், சென்னை போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

சூர்யா இதில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துவரும் நிலையில், தற்போது க்ளின் ஷேவ் செய்து இன்னொரு தோற்றத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். ஆனால், இது இரட்டை வேடமா அல்லது இரு தோற்றங்களில் ஒன்றா என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ரசிகர்கள் இரு வேடங்களில் நடித்தால் மாஸாக இருக்கும் என தங்களது விருப்பத்தினை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News