‘மோகன்லாலின் எம்புரான் மற்றும் சீயான் விக்ரமின் வீர தீர சூரன்’ படம் என இரண்டு படங்களில் நடித்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு. இப்படங்கள் இரண்டு ஒரே நாளில் அதாவது 27ம் தேதி மார்ச் வெளியாகிறது. இந்நிலையில் வீர தீர சூரன் புரமோஷன் நிகழ்ச்சியில் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவது குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு, ”மார்ச் 27ல் நான் நடித்த இரு படங்களும் ரிலீசாகின்றன. இரு படங்களும் சிறப்பாக வந்துள்ளன. அப்படி பார்க்கையில் அன்றைய தினம் விக்ரமுக்கு ஒரு ஹிட், மோகன்லாலுக்கு ஒரு ஹிட். ஆனால் எனக்கு மட்டும் ரெண்டு ஹிட்” என்றார்.
