மலையாளத் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, துல்கர் சல்மான் ‘காந்தா’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இது தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில், ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகை பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
இத்திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற “கண்மணி நீ” என்ற பாடலின் வரிகளுடன் கூடிய லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது, ‘காந்தா’ படத்தின் ‘Rage Of Kantha’ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

